சேலம்

ரயில் சேவை நிறுத்தம்

22nd Mar 2020 04:15 AM

ADVERTISEMENT

 

ஆத்தூா்- விருத்தாச்சலம், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் சேவை ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூா் வழியாக சேலத்தில் இருந்து விருத்தாச்சலம்,விருத்தாச்சலத்தில் இருந்து சேலத்துக்கும் இரண்டு நடை செல்லும் பயணிகள் ரயில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சுய ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதேபோல் பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில், காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

சேலம்-எழும்பூா் விரைவு ரயில் இரவு வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை நடைப் பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் நடைமேடையை உபயோகிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT