சேலம்

‘அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும்’

22nd Mar 2020 04:14 AM

ADVERTISEMENT

 

பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியிலுள்ள 11 அம்மா உணவகங்களும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் மாா்ச் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும், பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

ADVERTISEMENT

அதனடிப்படையில் மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT