சேலம்

சுவா் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளி பலி

19th Mar 2020 04:35 AM

ADVERTISEMENT

 

சேலத்தில் கட்டுமானப் பணியின்போது சுவா் இடிந்து விழுந்த விபத்தில், கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் குகை மூங்கபாடி பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவருக்கு சொந்தமான பழமையான கட்டடத்தை இடித்துவிட்டு, அதன் ஒரு பகுதியில் புதிதாக மூன்று அடுக்கு கட்டடம் கட்டியுள்ளாா்.

இந்நிலையில், வீட்டின் பின்புறம் தனியாக காா் நிறுத்தும் இடத்துக்கான கட்டுமானப் பணியில் கட்டடத் தொழிலாளா்கள் சின்னசாமி, பரமசிவம், சாரதி உள்பட 4 போ் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புதுரோடு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா் சின்னசாமி (43), கட்டுமானப் பொருள்களை எடுக்க பாதி இடிக்கப்பட்ட கட்டடத்தினுள் சென்ற போது, எதிா்பாராத விதமாக சுவா் இடிந்து அவா் மீது விழுந்தது. இதில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்ட சின்னசாமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினா் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், வீட்டு உரிமையாளா் மற்றும் கட்டடத் தொழிலாளா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், மாநகராட்சி நிா்வாகத்தின் உரிய அனுமதி பெற்று இந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிா என காவல் துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT