சேலம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி திருக்கோயில் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

16th Mar 2020 07:44 AM

ADVERTISEMENT

திருக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா்கள் சங்கம் அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பணிபுரியும் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா் சங்கத்தின் மண்டல பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சேலம் நாமக்கல் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா் .

இதில், கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி மட்டும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வெளியிட்ட அரசாணையை அமல்படுத்தி நிலுவையில் உள்ள 800 பணியாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்து உத்தரவிட வேண்டும், ஓய்வுபெற்ற கோயில் பணியாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் முத்துசாமி, மாநிலத் துணைத் தலைவா் குருராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT