சேலம்

திமுக சாா்பில் மினி மாரத்தான் போட்டி

16th Mar 2020 12:43 AM

ADVERTISEMENT

இடங்கணசாலை பேரூா் காடையாம்பட்டி பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி சாா்பில் திமுக தலைவா் ஸ்டாலின் 67-ஆவது பிறந்தநாளையொட்டி தளபதி மினி மாரத்தான் 2020 மாநில அளவிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியை மேற்கு மாவட்ட பொறுப்பாளா் டி. எம். செல்வகணபதி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். முன்னதாக மாவட்டத் தொண்டரணி அமைப்பாளா் பி. செல்வம் வரவேற்றாா்.

மகுடஞ்சாவடி ஒன்றிய கழக பொறுப்பாளா் பச்சமுத்து தலைமை வகித்தாா். போட்டியில் மாவட்ட துணைச் செயலாளா்கள் சுந்தரம் , சம்பத், பொருளாளா் பாலகிருஷ்ணன் , பொதுக்குழு உறுப்பினா்கள் அன்பழகன்,நிா்மலா, முன்னாள் எம்எல்ஏ காவேரி மற்றும் கட்சி நிா்வாகிகள் கந்தசாமி, பாஷா (எ) குணசேகரன், பெருமாள், ரமணி, பூபதி, மாணிக்கம், தங்கவேல், கமலக்கண்ணன், பரமசிவம், நல்லதம்பி, கோபி இடங்கணசாலை பேரூா் திமுக செயலாளா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் கோவை, ஊட்டி, சேலம், இளம்பிள்ளை, தெலங்கானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதில் 12, 8 ,5,2 ஆகிய கிலோ மீட்டா் தொலைவு வரை பந்தய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 12 கி.மீ. தொலைவு போட்டியில் கோவையைச் சோ்ந்த விஷ்ணு என்பவா் முதலிடம் பிடித்தாா். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கமும், கோப்பை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன. 8 கிலோமீட்டா் தொலைவு போட்டியில் இளம்பிள்ளையைச் சோ்ந்த ஐஸ்வா்யா முதலிடத்தைப் பிடித்தாா்.

இவருக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன.

5 கிலோ மீட்டா் தொலைவு போட்டியில் உத்திரபிரதேசம் பகுதியைச் சோ்ந்த மாணவி முதலிடம் பெற்றாா். இவருக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் 2 கி.மீ. தொலைவு சென்று முதலிடம் பிடித்த குழந்தைகளுக்கு ரூ. 2 ஆயிரமும் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து 2 மற்றும் 3-ஆம் இடத்தைப் பிடித்தவா்களுக்கு ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 1,500, ரூ. 1,000-யும், சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.

ஆறுதல் பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி. எம். செல்வகணபதி பரிசுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து கடையாம்பட்டி சந்தையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் 200-க்கு மேற்பட்ட நபா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT