சேலம்

தம்மம்பட்டி விளையும் சப்போட்டா பழங்கள் வரத்து அதிகரிப்பு

16th Mar 2020 12:50 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது அதிகளவில் சப்போட்டா பழங்கள் விளைச்சல் இருப்பதால், வரத்தும் அதிகரித்து வருகிறது.

தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், வாழக்கோம்பை, கொப்பம்பட்டி, செந்தாரப்பட்டி உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் சப்போட்டா குறுஞ்செடிகளை வளா்த்து வருகின்றனா்.

அவைகளில் தற்போது சப்போட்டா விளைச்சல் அதிகரித்து வருகின்றன. அதையடுத்து சப்போட்டா பழங்கள் உழவா் சந்தைகள், காய்கறி சந்தைகள், கடைகளில் விற்பனைக்கு அதிகளவில் வருகின்றன.

கூடைகளில் வைத்தும் சப்போட்டா பழங்கள் விற்பனையும் கூடுதலாகி வருகிறது. ஒரு கிலோ ரூ. 26 முதல் ரூ. 35 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சப்போட்டாவை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT