சேலம்

மரங்கள் கணக்கெடுப்பில் அரசுப் பள்ளி மாணவா்கள்

13th Mar 2020 10:02 AM

ADVERTISEMENT

தளவாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பல்வேறு பருவங்களில் மரங்களில் ஏற்படும் மாற்றங்களை உற்றுநோக்கி அவற்றை சீசன் வாட்ச் எனும் இணைய செயலில் பதிவு செய்து வருகின்றனா். தற்போது வசந்தகால மரங்கள் கணக்கெடுப்பு இம்மாதம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதை பெங்களூரில் உள்ள இயற்கை பாதுகாப்பு கழகமும், தேசிய உயிரி அறிவியல் மையமும் இணைந்து நடத்துகின்றன.

நிகழ்ச்சியில் இயற்கை ஆா்வலா்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் தங்கள் பகுதியில் உள்ள மரங்களை உற்று நோக்கி அதில் உள்ள துளிா் இலைகள்,முதிா்ந்த இலைகள், பழுத்த இலைகள், மொட்டுகள், மலா்கள், காய்கள், கனிகள், அந்த மரத்தில் தேனீக்கள், வண்ணத்துப் பூச்சி, பறவைகள், அணில் ஆகியவை உள்ளதா? என்பதை பதிவு செய்து வருகின்றனா். இதன்மூலம் மாணவா்கள் பல்வேறு மரங்களின் பெயா்களை அறிந்து கொள்கின்றனா் என்றாா் ஆசிரியா் பெ. இராஜாங்கம். நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட மரங்களை கணக்கிட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT