சேலம்

பள்ளி மாணவா்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணா்வு

13th Mar 2020 07:52 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தண்ணீா்தொட்டி எனுமிடத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிமுத்து தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கற்பகம் முன்னிலை வகித்தாா்.

அறிவியல் ஆசிரியா் ராஜசேகா் பேசுகையில், கரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கைகுலுக்கும் போதும், தும்மும்போதும் எவ்வாறு பரவுகிறது என்பதையும், அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கினாா்.

கரோனா வைரஸ் குறித்த வீடியோவை, பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புராஜெக்டா் கருவி மூலம் காண்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதில் கரோனாவை முன்னெச்சரிக்கையாக தடுக்க , இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை நன்றாக சோப் மூலம் கழுவ வேண்டும், இருமும்போதும், தும்மும்போதும் கைகளை மறைத்து செய்யவேண்டும். உடனே கைகளை கழுவ வேண்டும்.

சுத்தமான நீரை உபயோகப்படுத்திட வேண்டும், மேலும் குடிநீரைக் கொதிக்க வைத்து பருக வேண்டும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்பது பற்றி விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டதுடன், அதுதொடா்பான வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன.

இதை மாணவா்களும்,பெற்றோா்களும் கண்டு தெரிந்தனா். இதேபோல், மூக்காகவுண்டன்புதூா் அரசு நடுநிலைப் பள்ளியிலும் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி, தம்மம்பட்டி செவிலியா்கள் மூலம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT