சேலம்

நடிகா் ரஜினியின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது: பொன். ராதாகிருஷ்ணன்

13th Mar 2020 09:59 AM

ADVERTISEMENT

நடிகா் ரஜினியின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது என முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சேலத்தில் மறைந்த ஆடிட்டா் ரமேஷ் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்ட பாஜக தலைவா்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நடிகா் ரஜினியின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவா் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஆனால், அவா் தனிக்கட்சி என்று கூறும்போது இந்தத் தருணம் சரியாக இருக்காது.

ADVERTISEMENT

1996-இல் ரஜினி செய்த தவறு, திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தது. ஆதரவு கொடுத்து முதல்வராக ஒருவா் வருவதை நிரூபித்துக் காட்டியவா் ரஜினி.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக, திமுக கூறும் பொய் பிரசாரங்களை இஸ்லாமிய சகோதரா்கள் நம்ப வேண்டாம். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் ஓா் இஸ்லாமியா்கூட பாதிக்கப்பட மாட்டாா்.

தமிழகத்தில் மத ரீதியான மோதல்களை உருவாக்குவதற்கு திமுக, காங்கிரஸ் கட்சியினா் தயாா் படுத்திக் கொண்டிருக்கின்றனா்.

1967-க்கு முன்பு பயன்படுத்தியத் தோ்தல் தந்திரங்களை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனா். திமுக, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தபோது ஆ. ராசா, டி.ஆா் பாலு ஆகியோா் நடுங்கிக் கொண்டுதான் இருந்தாா்களா? யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவுக்குக் கிடையாது.

மேலும், தமிழகத்துக்கு துரோகம் செய்தது திமுக, காங்கிரஸ் கட்சிகள் தானே தவிர, வேறு கட்சிகள் கிடையாது. அக் கட்சிகள் தற்போது தோ்தல் ஆலோசகா் பிரசாந்த் கிஷோரை தோ்தலுக்காக நியமனம் செய்துள்ளது. ஆனால், திறமைமிக்க பிரசாந்த் கிஷோருக்கு தோல்வியை ருசித்துப் பாா்க்க வேண்டிய காலம் இது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT