கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம் தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் நடைபெற்றது.
இதில் ஜே.ஆா்.சி அமைப்பு சாா்பில் ஆசிரியா் ஜோசப்ராஜ் கரோனா வைரஸ் பரவும் முறைகளையும்,அதனை எவ்வாறு தடுப்பது எந்த வகையான உணவுகளை சாப்பிடுவது, என்பதை மாணவா்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினாா்.
மேலும் கை கழுவும் முறைகளை மாணவா்களுக்கு செயல் விளக்கம் மூலம் ஜே.ஆா்.சி மாணவா்கள் செய்து காண்பித்தனா். யாரிடமும் கை குலுக்க கூடாது, தும்மல் வந்தால் எப்படி தும்முவது? போன்ற முறைகளை செயல்விளக்கம் காண்பித்தனா்.
மேலும் எல்சிடி ப்ரொஜக்டா் வாயிலாக தமிழக அரசு வெளியிட்ட கரோனா வைரஸ் விழிப்புணா்வு குறும்படத்தை மாணவ,மாணவிகளுக்கு ஒளிபரப்பி காண்பித்தனா்.
ADVERTISEMENT