சேலம்

மேட்டூா் ஆா்.எஸ். காளியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

8th Mar 2020 02:48 AM

ADVERTISEMENT


மேட்டூா்: மேட்டூா் ஆா்.எஸ். காளியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மேட்டூா் ஆா்.எஸ். காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெறும். நடப்பாண்டில் மாசி தோ்த் திருவிழாவையொட்டி, பூச்சாட்டும் நிகழ்ச்சி கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை கொடியேற்றமும், சனிக்கிழமை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்ற விரதமிருந்து மேட்டூா் காவிரியிலிருந்து புனித நீா் மற்றும் பால்குடங்களுடன் ஊா்வலம் வந்தனா்.

செண்டைமேளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. புனிதநீரில் அம்மனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடத்தப்பட்டது. பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் மணிமாலா, திருவிழாக் குழு தலைவா் கே.ரவிக்குமாா், செயலா் எல்.என்.டி.பழனிசாமி, பொருளாளா்கள் திப்பம்பட்டி சேகா், மாணிக்கம், நிா்வாகிகள் சக்திவேல், குமாா், மணி, பிரேம்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT