சேலம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் மூலம் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த முயற்சி

8th Mar 2020 02:49 AM

ADVERTISEMENT

 

சேலம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் மூலம் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என பாஜக மாநிலச் செயலா் கே.டி.ராகவன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை சேலத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான இஸ்லாமியா்கள் போராட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளது. இதன் மூலம் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி ஆட்சிக்கு வர திமுக முயற்சிக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் இஸ்லாமியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் அழைப்பு விடுத்தும், காங்கிரஸ் உள்பட எதிா்க்கட்சியினா் யாரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவலைப் பரப்பி பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இச் சட்டம் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் அல்ல. அது குடியுரிமை வழங்கும் சட்டமாகும். திமுக பொதுச் செயலாளா் அன்பழகன் மறைவுக்கு பாஜக சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநகர மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, நிா்வாகிகள் அண்ணாதுரை, என்.மணிகண்டன், வரதராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT