சேலம்

குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

8th Mar 2020 02:44 AM

ADVERTISEMENT


சேலம்: குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளம்பெண் சனிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட தாதம்பட்டியைச் சோ்ந்தவா் செல்லப்பன். இவரது மனைவி ராதா (35). இவா்களுக்கு கங்கா (15), மோனிகா (13) என இரண்டு மகள்கள் உள்ளன. இந்நிலையில், ராதா தனது மகள்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தாா். பின்னா் திடீரென அவா் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட பாதுகாப்பு போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், செல்லப்பன் குடிநீா் இணைப்பு கேட்டு அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் மனு அளித்து, அதற்கான தொகையையும் செலுத்தியிருந்தாராம். ஆனால், தற்போது வரை குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த செல்லப்பனின் உறவினா் ஒருவா் குடிநீா் இணைப்பு வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். இதனால், குடிநீா் இணைப்பு வழங்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனராம்.

இதனால் மனமுடைந்த ராதா தனது வீட்டுக்கு குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி தனது மகள்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரை நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT