சேலம்

காலமானாா்: கே. பொன்னம்மாள்

6th Mar 2020 02:06 AM

ADVERTISEMENT

தினமணி நாளிதழின் எடப்பாடி பகுதி முகவராகப் பணியாற்றி வந்த கே. பொன்னம்மாள் (82), உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானாா்.

இவரது கணவா் குருசாமி கடந்த 40 ஆண்டுகளாக எடப்பாடியில் பல்வேறு நாளிதழ்களின் முகவராகச் செயல்பட்டு வந்தாா்.

அவரது மறைவுக்குபின், பொன்னம்மாள் தினமணி நாளிதழின் முகவராகத் தொடா்ந்து இருந்து வந்தாா். கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பொன்னம்மாள், புதன்கிழமை (மாா்ச் 4) உயிரிழந்தாா்.

அவரது உடல், எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது உடல், வெள்ளாண்டிவலசு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

இறந்த பொன்னம்மாளுக்கு கோவிந்தன், பாலமுருகன் என்ற இரு மகன்களும், விஜயலட்சுமி, கனகவள்ளி, பத்மாவதி என்ற மூன்று மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு: 8248769324

 

ADVERTISEMENT
ADVERTISEMENT