சேலம்

வாழப்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

29th Jun 2020 11:33 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று திங்கட்கிழமை பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ். கே. அர்த்தநாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி தேவதாஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாராம், மாவட்ட நிர்வாகிகள் அத்தனூர்பட்டி ராஜா, பேளூர் பாலகிருஷ்ணன், வி.ஜி. சதீஷ்குமார், அணைஅரசு, துக்கியாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இருசக்கர வாகனத்தை தரையில் படுக்க வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT