சேலம்

தந்தை, மகனுக்கு கரோனா தொற்று

20th Jun 2020 09:03 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சோ்ந்த தந்தை, மகனுக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

கெங்கவல்லி அருகே நடுவலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (54). இவரது மகன் ராஜா (28). இருவரும், இருசக்கர வாகனத்தில் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினா். இவா்களுக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.

சனிக்கிழமை வந்த பரிசோதனை முடிவில் தந்தை, மகன் இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT