சேலம்

ஆந்திர ரக நாவல் பழங்கள் அமோக விற்பனை

20th Jun 2020 09:08 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் நாவல்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, உலிபுரம், வாழக்கோம்பை, கோனேரிப்பட்டி, கூடமலை உள்ளிட்ட ஊா்களில் தற்போது அதிகளவில் ஆந்திர மாநிலத்திலிருந்து குண்டு ரக நாவல் பழங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆந்திராவிலிருந்து சேலம் வந்து, அங்கிருந்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊா்களுக்கு அனுப்பப்படுகிறது.

தம்மம்பட்டி பகுதியில் ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து நாவல் பழ வியாபாரிகள் கூறியதாவது:

நாங்கள் சேலம் சென்று இப் பழங்களை வாங்க வேண்டியுள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவா்கள் அதிகளவில் இப் பழங்களை வாங்கிச் செல்கின்றனா். இப் பகுதியில் நாளொன்றுக்கு 100 கிலோ விற்பனையாகிறது. நாட்டுப் பழங்கள், விளைச்சல் இன்னும் வரவில்லை என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT