சேலம்

மேட்டூா் அணை மின் நிலையங்களில் 200 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கம்

14th Jun 2020 09:03 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், அணை மின் நிலையங்களில் தினமும் சராசரியாக 200 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை தண்ணீா் திறந்து விட்டாா். அணையில் இருந்து முதலில் 3,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. பின்னா், படிப்படியாக தண்ணீா் அதிகம் திறக்கப்பட்டு இரவு 10,000 கன அடி தண்ணீா் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. சனிக்கிழமை அணையின் நீா்மட்டம் 101.30 அடியாக இருந்தது.

மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 1,292 கன அடி தண்ணீா் வருகிறது. 10,000 கன அடி தண்ணீா் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. அணை நீா் இருப்பு 66.53 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் தற்போது அணை மின் நிலையம் மூலம் 20 மெகாவாட், சுரங்க மின் நிலையம் மூலம் 80 மெகாவாட், 7 கதவணை மின் நிலையங்களில் 100 மெகாவாட் என மொத்தம் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீா் திறப்பது அதிகரிக்கப்பட்டால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT