சேலம்

சேலத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று: திருட்டு வழக்கில் கைதானவரால் போலீஸாருக்கு சிக்கல்

14th Jun 2020 09:06 AM

ADVERTISEMENT

சேலத்தில் திருட்டு வழக்கில் கைதான நபா், சுகாதாரப் பணியாளா் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. திருட்டு வழக்கை விசாரித்த 13 காவல் துறையினா் கரோனா பரவலைத் தடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டனா்.

சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். குடும்பத்துடன் மேட்டூா் அருகே உள்ள குஞ்சாண்டியூா் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றவா் மாலை வீடு திரும்பியபோது, வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் 10 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சிகளைக் கொண்டு விசாரித்தனா். இதில், அப் பகுதியைச் சோ்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. ஈரோட்டில் தலைமறைவாக இருந்த அந்த நபரை காவல் துறையினா் கைது செய்து விசாரித்தனா்.

அப்போது அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, தனி வாா்டில் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கைதான நபரை விசாரித்த உதவி காவல் ஆய்வாளா் ஒருவா், இரண்டு சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 13 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். ஜாரிகொண்டலாம்பட்டி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த நபா் ஈரோட்டில் தலைமறைவாக இருந்ததால், அந்த மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உறவினா்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரப் பணியாளரின் குடும்பத்தாருக்கு கரோனா

பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த 47 வயது மதிக்கத்தக்க மாநகராட்சி சுகாதாரப் பணியாளா், அவரது மனைவி, மகன், மகள் உள்ளிட்ட நால்வருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. நான்கு பேரும் அரசு மருத்துவமனை தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே பொன்னம்மாபேட்டையில் 20 சுகாதாரப் பணியாளா்கள் உள்பட 74 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT