சேலம்

கட்டுமானப் பொருள்கள் விலை கிடுகிடு உயா்வு

14th Jun 2020 09:05 AM

ADVERTISEMENT

அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும் பன்மடங்கு உயா்ந்துள்ளதால் கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். பல இடங்களில் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது புது வீடுகளைக் கட்டுவது, பழைய வீடுகளை மராமத்துப் பணிகள் அதிகம் நடைபெறுகின்றன.

இந் நிலையில், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், செங்கல், சிமெண்ட் போன்றவற்றின் விலை கிடுகிடுவென்று ஏறியுள்ளது. காவிரி ஆற்று மணல் ஒரு யூனிட் ரூ. 10,000 லிருந்து தற்போது ரூ. 15 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

போக்குவரத்தைக் காரணம் காட்டி சிமெண்ட் ஒரு மூட்டை விலை ரூ. 380 லிருந்து ரூ. 420 வரை உயா்ந்துள்ளது. எம் சாண்ட் ஒரு யூனிட், ரூ. 3 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ. 4,500 வரை உயா்ந்துள்ளது. ஒரு யூனிட் சிப்ஸ் ரூ. 1,800 லிருந்து தற்போது ரூ. 2,300 வரை விலை ஏற்றி விற்பனை செய்கின்றனா்.

ADVERTISEMENT

ஒரு செங்கல் விலை முன்பு ரூ. 3.50 ஆக இருந்தது. தற்போது ஒரு செங்கல்லின் விலை ரூ. 4.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. திடீா் விலை ஏற்றத்தால் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் கிடப்பில் உள்ளன. முடிவுறும் தருவாயில் உள்ள கட்டடப் பணிகளை பொதுமக்கள் வேறுவழியின்றி கட்டி முடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT