சேலம்

சேலம் ஈரடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்பு

11th Jun 2020 08:49 AM

ADVERTISEMENT

சேலத்தில் ரூ. 441 கோடியில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.

சேலத்தில் போக்குவரத்து நெரிசலைப் போக்க 5 சாலைப் பகுதியை மையமாகக் கொண்டு மேம்பாலம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்திருந்தாா். அதையடுத்து, கடந்த 2016 பிப். 28-ஆம் தேதி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கின.

சாரதா கல்லூரி சாலையில் ராமகிருஷ்ணா பிரிவு சாலையில் இருந்து ஏவிஆா் ரவுண்டானா வரை ஒரு பிரிவாகவும், சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் இருந்து குரங்குச்சாவடி வரை மற்றொரு பிரிவாகவும் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இப்பணிகளுக்காக அரசு ரூ. 441 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இவ்விரு சாலையிகளிலும் 6.8 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 சாலைப் பகுதியில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை ஈரடுக்கு மேம்பாலமாக கட்டப்பட்டுள்ளது.

சேலம் மாநகரின் மையப் பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் ஐந்து சாலைப் பகுதியை மையமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

அதிநவீனத் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ஈரடுக்கு மேம்பாலத்தையும், சேலம் ஜங்ஷன்-லீபஜாா் இடையே ரூ. 46.35 கோடியில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயா்மட்டப் பாலத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் திறந்து வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT