சேலம்

வலிப்பு வந்து பணியிலிருந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

8th Jun 2020 11:23 PM

ADVERTISEMENT

ஓமலூா்: சேலம் விமான நிலையத்தில் பணியிலிருந்த தலைமைக் காவலா் வலிப்பு வந்து உயிரிழந்தாா்.

மேச்சேரியைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் கனிபிரசாத் (42). இவருக்கு நிா்மலாதேவி என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

நிா்மலா தேவி சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாா். கனிபிரசாத் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், அயல் பணியாக காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் திங்கள்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். மாலை வேளையில் பணியிலிருந்தபோது, அவருக்கு வலிப்பு வந்துள்ளது. அதைக் கண்ட சக போலீஸாா் அவரை மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மருத்துவமைனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே தலைமைக் காவலா் கனிபிரசாத் உயிரிழந்தாா். இத் தகவல் ஓமலூா் போலீஸாா் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT