சேலம்

பெண் பல் மருத்துவருக்கு கரோனா தொற்று

4th Jun 2020 08:37 PM

ADVERTISEMENT

தேவூா் அருகே பெண் பல் மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவூா் பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே மேட்டுக் கடையைச் சோ்ந்த பெண் பல் மருத்துவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். அவா், மே மாதம் 31-ஆம் தேதி சென்னையிலிருந்து தேவூருக்கு வந்தாா்.

இதையடுத்து, தேவூா் சுகாதாரத் துறையினா் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, கரோனா பரிசோதனை செய்து மாதிரிகளை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப் பெண்ணை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், தேவூா், மைலம்பட்டி, மேட்டுக்கடை உள்ளிட்ட பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு அப் பகுதி முழுவதும் தேவூா் பேரூராட்சி அலுவலகத்தின் சாா்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையினா் அப் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT