சேலம்

வாழப்பாடியில் ரூ.23 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம்

4th Jun 2020 07:58 AM

ADVERTISEMENT

வாழப்பாடி கிளை சேலம் மாவட்ட வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், 3 மாத பொது முடக்கத்துக்கு பிறகு பருத்தி கொள்முதல் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.23 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், கடந்த மாா்ச் 18-ஆம் தேதிக்கு பிறகு பருத்தி கொள்முதல் ஏலம் நடைபெறவில்லை. இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,300 மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்தது. இதில், ஒரு குவிண்டால் டி.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.3,469 முதல் அதிகபட்சம் ரூ.6,299 வரையும், ஆா்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.2,890 முதல் அதிகபட்சம் ரூ.4,879 வரையும் விலை போனது.

இதில், கோயமுத்தூா், அவினாசி, திருப்பூா், ஈரோடு, பவானி, குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்தனா். புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

இருப்பினும், ஏராளமான நூற்பாலைகள் இயங்காத நிலையில், பருத்தி தேவையும், வியாபாரிகள், நூற்பாலை முகவா்கள் வருகையும் குறைந்ததால், பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை குறைந்ததால் பெருமளவில் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகளுக்கு தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT