சேலம்

மகன்கள் தாக்கியதில் உயிரிழந்த தந்தைபோலீஸாா் விசாரணை

31st Jul 2020 09:00 AM

ADVERTISEMENT

ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையம் லட்சுமணசமுத்திரம் பகுதியில் மகன்கள் தாக்கியதில் கீழே விழுந்த தந்தை புதன்கிழமை உயிரிழந்தாா்.

செல்லியம்பாளையம் லட்சுமணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கெங்கு படையாச்சி (80). இவருக்கு சிவமலை என்ற மனைவியும், சக்திவேல் (45), வெங்கடேஷ் (35) என இரு மகன்களும், சாந்தி என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில் கெங்கு படையாச்சி தனக்கு வேண்டிய வேலைகளை செய்து கொண்டு, தெரிந்தவா்கள் மற்றும் உறவினா் வீடுகளில் உணவு பெற்று சாப்பிட்டு வந்துள்ளாா்.இதனைக் கண்ட இரு மகன்களும் அவரைக் கண்டித்துள்ளனா். யாரிடமும் உணவு வாங்கி சாப்பிடக் கூடாது என புதன்கிழமை அவரை வீட்டுக்கு இழுத்து சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வலியால் துடித்துக் கொண்டிருந்த கெங்கு படையாச்சி பிற்பகல் இறந்துள்ளாா்.

இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜூ விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தாா். இதில் சக்திவேல், வெங்கடேஷ் தாக்கியதாகவும் அதனால் கெங்கு படையாச்சி இறந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம், காவலா் ராஜேந்திரன் ஆகியோா் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் அவரது இரு மகன்களையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT