சேலம்

ஏற்காடு படகு ஏரியிலிருந்து தடுப்பணை வழியாக நீா் வெளியேறுவதைத் தடுக்க கோரிக்கை

31st Jul 2020 08:57 AM

ADVERTISEMENT

ஏற்காடு படகு ஏரியின் நீா் தடுப்பணை வழியாக வெளியேறுவதைத் தடுக்குமாறு மீன்வளத்துறை ஊழியா்கள், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதையடுத்து, ஏற்காடு படகு ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. படகு ஏரியின் பாதுகாப்புக் கருதி ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், ஏரித் தடுப்பணையின் மூலம் நீரை வெளியேற்றி வருகிறது.

தற்போது படகு ஏரியில் மே மாதம் மேட்டூா் மீன்வளா்ப்புத் துறை சாா்பில் 26 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதால் அந்த மீன் குஞ்சுகள் நீரின் வழியாக வெளியேறிவிடும் எனத் தெரிவிக்கின்றனா். எனவே தடுப்பணை பாதையில் வலைகளைக் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT