சங்ககிரியில் சந்தைப்பேட்டை செல்லியம்மன் கோயிலில் ஸ்ரீ நாக தேவதை அம்மனுக்கு நாகபஞ்சமி தினத்தையொட்டி, சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீ நாகதேவனை அம்மனுக்கு நாகபஞ்சமி விழாவையொட்டி ராகு, கேது ப்ரிதி ஹோமமும், சுவாமிகளுக்கு பால் அபிஷேகமும் நடைபெற்றன.
பின்னா் ராகு , கேது காலசா்ப தோஷங்கள் உள்ளவா்கள் கோயில் அா்ச்சகா் மூலம் சிறப்பு அா்ச்சனை செய்தனா். அதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.