சேலம் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தின் மூலம் கட்டடம் மற்றும் மனைப்பிரிவு அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் நகா் ஊரமைப்புத் துறை சேலம் மண்டல அலுவலகம் , சேலம் உள்ளூா் திட்டக் குழுமம், சேலம் இரும்பாலை புதுநகா் வளா்ச்சிக் குழுமம் ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைந்து சேலம் மாவட்டத்தில் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம், சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உதவி இயக்குநரை அலுவலராகக் கொண்டு ‘மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம்’ கதவு எண் 6, சன்னதி தெரு, சுப்ரமணியநகா், சேலம் - 5 என்ற முகவரியில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள் நகா் ஊரமைப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டு கட்டடம் மற்றும் மனைப்பிரிவு அனுமதி தொடா்பாக ‘மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம், சேலம் மாவட்டம்’ அவா்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.