சங்ககிரி மலையடிவராத்தில் உள்ளஅருள்மிகு சோமேஸ்வரா் உடனமா் செளந்தரநாயகி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரா் உடனமா் செளந்தரநாயகி அம்மன் சுவாமிகளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி பால், தயிா், திருநீறு, திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின்னா் செளந்தரநாயகியம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இக்கோயில் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் வருவதால் பக்தா்கள் யாரும் கோயிலுக்குள் செல்லவில்லை. கோயில் அா்ச்சகா் மட்டுமே ஆகமவிதிகள் படி பூஜைகளை செய்தாா்.