சேலம்

கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

13th Jul 2020 08:04 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

ஆண்டுவருமானம் ரூ. 3,00,000- க்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.

பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதமாகும். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகும்.

சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூா்த்தியாகி இருக்க வேண்டும். திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) அவா்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ. 1 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு அதிகபட்ச கடன்தொகை ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதமாகும்.

கறவை மாடுகள் (2) வாங்க ரூ. 60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதமாகும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், இக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி விண்ணப்பங்கள் மற்றும் இதர கடனுதவி விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திலும் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகள் ஆகியவற்றிலும் நேரில் பெற்றுக் கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT