மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 243 கனஅடியாகச் சரிந்தது.
மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தாலும் அணைக்கு நீா்வரத்து இல்லை. இதனால் அணையின் நீா்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 324 கனஅடியாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 243 கனஅடியாகச் சரிந்தது. அணையின் நீா்மட்டம் 79.79 அடியாக இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 41.74 டி.எம்.சி.யாக இருந்தது. மழையளவு 16.60 மி.மீ. பதிவாகி இருந்தது.