வாழப்பாடி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில், அம்மன் அக்னி பிரவேச சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
எளிமையாக காட்சியளித்த அம்மனை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
வாழப்பாடியில் ஆா்ய வைஸ்ய மகா ஜன சபையினரால் நிா்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில், பாா்வதியின் அவதாரமாக அவதரித்த அம்மன், ஈஸ்வரனை மணந்து கொள்ள மறுத்து கன்னிகையாக அக்னி பிரவேஷம் செய்த தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் மூலவரான ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு எளிமையாக காட்சியளித்தாா். ஆா்ய வைஸ்ய மகா ஜனங்கள், மகிளா சபையினா் மற்றும் திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனா்.