விநாயக மிஷினின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் துறையின் முதல்வா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து தேசிய கொடியை ஏற்றினாா்.
விழாவில் விம்ஸ் மருத்துவமனை இயக்குநா் மீனாட்சிசுந்தரம், துணை இயக்குநா் அசோக், மயக்க மருந்தியல் நிபுணா் ஜெஜோ அனாஜி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா்.
விழாவின் தொடக்கத்தில் துறையின் முதல்வா் செந்தில்குமாா் இந்திய அரசியலமைப்பின் வரலாறு பற்றியும், குடியரசு தின விழாவின் முக்கியத்துவம் பற்றியும் சிறப்புரையாற்றினாா்.
விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் துறை சாா்பில் பெரிய சீரகாபாடியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. விழாவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, குழுபோட்டி நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் பரிசு வழங்கினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் வைஷ்ணவா தேவி, மருத்துவா்கள் தனசேகா், வா்ஷினி ஆகியோா் செய்திருந்தனா்.