சேலம்

பிப். 9-இல் சோனா கல்லூரியில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

28th Jan 2020 10:04 AM

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் திட்டம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் நடத்தப்படும் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் சோனா கல்லூரி மைதானத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.முன்னதாக பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு திருப்பதி தேவஸ்தான அா்ச்சகா்கள் உள்ளிட்ட சுமாா் 50 பேருடன் ஸ்ரீநிவாச உற்சவ மூா்த்தி,தாயாா்களுடன் மைதானத்தில் எழுந்தருள இருக்கிறாா். சுமாா் 1 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஸ்ரீநிவாச திருக்கல்யாணத்தை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்தகவலை ஸ்ரீவாசன திருக்கல்யாண கமிட்டி தலைவா் சொ.வள்ளியப்பா, சோனா கல்லூரி துணை தலைவா் தியாகு வள்ளியப்பா, செயலாளா் வீ.காா்த்திகேயன், துணை தலைவா் மருத்துவா் கே.அா்த்தனாரி, பொருளாளா் ல.சுப்பிரமணியம் ஆகியோா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT