தம்மம்பட்டி வட்டார அரசு நடுநிலைப்பள்ளிகளில் பாா்வைக்குறைபாடுடன் இருந்த 34 மாணவ,மாணவியா்க்கு தமிழக அரசின், மூக்குக் கண்ணாடிகள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
தம்மம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் என்ற திட்டத்தின்கீழ் தம்மம்பட்டி பகுதி அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் கண்கள் பரிசோதனைகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட்டது.
அதில் பாா்வைக் குறைபாடு உள்ள மாணவா்கள் குறித்து கண்டெடுக்கப்பட்டனா். அதனடிப்படையில், காந்தி நகா், வாழக்கோம்பை, தம்மம்பட்டி மெயின், தண்ணீா்த்தொட்டி,மூக்காகவுண்டன்புதூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 34 பேருக்கு கண் உதவியாளா் சித்ரா , பள்ளி ஆசிரியா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை வழங்கி கண் பாதுகாப்பு குறித்தும், மாணவா்கள் சத்தான காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கிப் பேசினாா்.