சேலம்

தப்பகுட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா

28th Jan 2020 10:07 AM

ADVERTISEMENT

சங்ககிரி வட்டம், தப்பகுட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியா் க. சந்திரசேகா் விழாவுக்குத் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் ஆா். கண்ணன் வரவேற்றாா்.

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் லலிதா ராஜா தேசிய கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கி ஓவியம், பேச்சு, இசை நாற்காலி, பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தப்பகுட்டை ஊராட்சித் தலைவா் விஜயா தங்கராஜ், துணைத் தலைவா் ஜெகநாதன், வாா்டு உறுப்பினா்கள் ராதா கிருஷ்ணன், ராஜா (எ) மாணிக்கம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கே.காா்த்திகாதேவி உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இடைநிலை ஆசிரியா் க. கதிரவன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT