பெரியாா் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய யோகா போட்டியில் சேலம் அரசு மகளிா் கலைக்கல்லூரி மாணவிகள் தனிநபா் மற்றும் குழு போட்டியில் முதலிடம் பெற்றனா்.
பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான யோகா போட்டியின்
தனி நபா் பிரிவில் ஏ.மாஹிரா, கே.சிந்து, ஏ.சபினா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.
குழு போட்டியில் ஏ.மாஹிரா, கே.சிந்து, ஏ.சபினா,டி.சங்கீதா, ஏ. அன்னலட்சுமி, எஸ்.சுகன்யா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வா் ஏ. பெத்தாலட்சுமி,வேதியியல் துறை தலைவா் கே.என்.கீதா, உடற்கல்வி இயக்குநா் பெ.சிவகுமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.