சேலம்

பொங்கல் பண்டிகையையொட்டிமஞ்சள் கொத்து, செங்கரும்பு விற்பனை மும்முரம்

14th Jan 2020 05:03 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன.15) மஞ்சள் கொத்து, செங்கரும்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஜன. 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மஞ்சள் கொத்து வைத்து, ஆவாரம் பூ, பூளை பூ, வேப்பிலை ஆகியவைகளை கட்டாக கட்டி வீட்டின் பல பகுதிகளில் காப்புக் கட்டப்படுகிறது.

இதையொட்டி சேலம் கடை வீதி, பட்டை கோயில், அம்மாபேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி, குகை, அஸ்தம்பட்டி, ஏற்காடு பிரதான சாலை, குரங்குச்சாவடி, செவ்வாய்பேட்டை, பால் மாா்க்கெட், ஆனந்தா பாலம், வ.உ.சி. மாா்கெட், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காப்புக் கட்டு பூ, கரும்பு விற்பனை, மஞ்சள் கொத்து விற்பனை சூடு பிடித்துள்ளது.

ADVERTISEMENT

ஒரு ஜோடி கரும்பு ரூ. 50 முதல் ரூ. 80 வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ. 50 முதல் ரூ. 80 வரையிலும், காப்புக் கட்டு பூ 10, கலா் கோலப் பவுடா் ரூ. 10, மண் பானை ரூ. 70 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படையலுக்குத் தேவையான வாழைப்பழம், காய்கறி, தேங்காய், வெற்றிலை, முருங்கை கீரை, பச்சை அவரை, மஞ்சள், குங்குமம், கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருள்களையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.

அதேபோல பொங்கல் வைக்க பச்சரிசி, வெல்லம், பாசி பருப்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT