சங்ககிரி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், தேவண்ணகவுண்டனூரில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா்.
எட்டாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்குத் தொடங்குவது தொடா்பான பாடம் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து களப்பயணம் மேற்கொண்டனா்.
ஆசிரியா் ஆா்.முருகன், ஆசிரியை மகேஸ்வரி ஆகியோா் தலைமையில் அஞ்சல் அலுவலகம் சென்ற மாணவா்களை அஞ்சல் அலுவலா் கே. பிரியா வரவேற்று அஞ்சல் அலுவலகத்தில் பின்கோடு பின்பற்றுவதன் நோக்கம், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் சேமிப்பு கணக்கு, தொடா் ஈட்டு வைப்பு கணக்கு, கிசான் விகாஸ் பத்திரம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் குறித்து விளக்கம் அளித்தனா்.