மேட்டூா் அணையின் நீா்மட்டம் 115. 45 அடியாகச் சரிந்தது.
காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 1,040 கன அடியாகச் சரிந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 115.45 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 86.39 டி.எம்.சி. யாக இருந்தது.
ADVERTISEMENT