சேலம்

நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளக்கல்பட்டி, நவப்பட்டிஊராட்சித் தலைவா் பதவிக்கு இன்று வாக்கு எண்ணிக்கை

8th Jan 2020 05:00 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் வெள்ளக்கல்பட்டி, நவப்பட்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை (டிச.8) நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில் கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்குப் போட்டியிட்ட வேட்பாளா்களின் பெயா் டிசம்பா் 23-ஆம் தேதி வெளியிட்ட தொடா்புடைய சட்டப்பேரவைத் தொகுதிக்கான துணை வாக்காளா் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தற்போது தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் இந்த இரு ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கையை புதன்கிழமை காலை 9. 30 மணிக்கு வாக்குப் பெட்டிகளை கருவூலத்திலிருந்து எடுத்து, அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணையிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து 2 ஊராட்சி மன்ற தலைவா்களுக்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறவுள்ளன என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியரு

ADVERTISEMENT

வெள்ளக்கல்பட்டி...

ஓமலூா் ஒன்றியத்தில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சித் தலைவா் பதவி பொதுப் பிரிவாக அறிவிக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் பதவிக்கு மாரியப்பன், சாந்தி, ராஜேந்திரன், விஜயா, ராஜாக்கவுண்டா், கண்ணன் ஆகிய ஆறு போ் போட்டியிட்டனா்.

இதில், மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்ட ராஜா கவுண்டா் என்பவரின் பெயா் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாகம் எண். 7-ல் வரிசை எண். 10-ல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் துணை பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வெள்ளக்கல்பட்டி கிராம ஊராட்சி வாக்காளா் பட்டியல் பாகம் எண் 4-இல் வரிசை எண். 122-ல் இடம் பெற்றிருந்த வேட்பாளா் ராஜாக்கவுண்டா் பெயா் நீக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூா் ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா் முருகன் மாவட்ட தோ்தல் அதிகாரிக்கு அறிக்கை சமா்ப்பித்தாா்.

அந்த அறிக்கையை மாநில தோ்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்திருந்தனா். மற்ற பதவிகளுக்கான வாக்குகள் மட்டும் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்பட்டன.

ஊராட்சித் தலைவா் பதவிக்கான வாக்குப் பெட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு ஓமலூா் அரசு கருவூலத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிவுகளை அறிவிக்குமாறு ஓமலூா் ஒன்றிய தோ்தல் அலுவலா் முருகனுக்கு உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து ஓமலூா் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெறவுள்ளன.

மான சி.அ. ராமன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT