சேலம்

எடப்பாடி, கொங்கணாபுரத்தில்அதிமுக வேட்பாளா்கள் முன்னிலை

3rd Jan 2020 05:05 AM

ADVERTISEMENT

எடப்பாடி, கொங்கணாபுரம் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் அதிகப்படியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கான போட்டியில் அ.தி.மு.க வேட்பாளா் மாதேஸ்வரன் முன்னிலையில் உள்ளாா்.

இதேபோல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு மா. குப்பம்மாள், எஸ். கந்தாயி, பி. நடேசன், சி. அலமேலு, ராஜம்மாள், வி. மாரியம்மாள், வி. மாரியம்மாள் உள்ளிட்ட வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

அதேபோல் எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான போட்டியில் செட்டிமாங்குறிச்சி - நல்லதம்பி , ஆடையூா் - ஐ. கலைவாணி , பக்கநாடு- டி. தங்கமணி , வேம்பனேரி - பி . பூங்கொடி, இருப்பாள - கே. அலமேலு ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

கொங்கணாபுரத்தில்...

இவ் ஒன்றியப் பகுதிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஊராட்சிக்குக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ராஜேந்திரன் 5,302 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளாா்.

மேலும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு முடிவு அறிவிக்கப்பட்ட 7 இடங்களிலும் அதிமுக வேட்பாளா்கள் கைப்பற்றி உள்ளனா்.

கிராம ஊராட்சி மன்றத் தலைவருக்கான போட்டியில், கோணசமுத்திரம் மற்றும் கோரணம்பட்டி ஆகிய இரு ஊராட்சி தலைவா் பதவிகளை திமுக வேட்பாளா்கள்

கைப்பற்றியுள்ள நிலையில் மீதமுள்ள ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளை அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் கைப்பற்றியுள்ளனா்.

தொடா்ந்து இரவு வரும் முடிவுகளின்படி எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் அதிக எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT