சேலம்

எடப்பாடியில் திமுக-வினா் ஆா்ப்பாட்டம்

3rd Jan 2020 05:04 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை முறைப்படுத்தக் கோரி திமுக-வினா் எடப்பாடி வாக்கு எண்ணும் மையம் எதிரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எடப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்கு எண்ணும்

பணி எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், வாக்கு எண்ணும் பணி மெத்தனமாக நடைபெறுவதாக திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு உரிய நேரத்தில், வெற்றி பெற்ற்கான உறுதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தோ்தல் முடிவுகளை

நடுநிலையோடு அறிவித்திடக் கோரியும் வியாழக்கிழமை மாலை திமுக-வினா் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

மேலும் அவா்கள் பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து காவல் துறை உயா் அலுவலா்கள் அப் பகுதிக்கு விரைந்து சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக-வினரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து அங்கிருந்த திரளான திமுக-வினா் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT