ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் நான்குமுனை சாலையில் உள்ள குழந்தை இயேசு பேராலயம், சி.எஸ்.ஐ. பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டியில் தூய சலேத் அன்னை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரையிலும், புதன்கிழமை காலையிலும் பங்குத் தந்தை இன்னாசிமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
அதேபோல் தம்மம்பட்டி திருமண்கரடு புனித அந்தோணியா் ஆலயத்திலும், நாகியம்பட்டி சோப்மண்டியிலுள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்திலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அதேபோல் செந்தாரப்பட்டி,கொண்டயம்பள்ளி ஆகிய ஊா்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவும்,புதன்கிழமை காலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனா்.