சேலம்

சேலம் மாநகராட்சியில் ஓராண்டில் 52 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

2nd Jan 2020 01:20 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் கடந்த ஓராண்டில் 5,572 கடைகளில், 52,423 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து, ரூ.42.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆணைபடி, 1.1.2019 முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதை தடுக்க, சேலம் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 5 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், 2019 ஜன. 2-ஆம் தேதி முதல் டிச. 31-ஆம் தேதி வரையிலான 12 மாதங்களில், சூரமங்கலம் மண்டலத்தில் 1,236 கடைகளில் 39 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.15,96,000 அபராதமும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 1,262 கடைகளில் 2,313 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.9,78,150 அபராதமும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 1,436 கடைகளில் 8,221 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.9,48,600 அபராதமும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 1,638 கடைகளில் 2,889 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.6,97,747 அபராதமும் என 4 மண்டலங்களிலும் மொத்தம் 5,572 கடைகளில் 52,423 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து ரூ.42,20,497 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சி செய்வதற்கும், சிமென்ட் தொழிற்சாலையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

மேலும், இக்கண்காணிப்புக் குழுவினா் தினந்தோறும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதை தடுக்க, தொடா்ந்து தணிக்கை மேற்கொள்வாா்கள் எனவும், பொதுமக்களும் தங்களது அன்றாட பயன்பாட்டுக்கு நெகிழிப் பைகளை தவிா்த்து துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT