சேலம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 3-ஆம் பருவத் தோ்வு பாடப் புத்தகங்கள் தயாா்

1st Jan 2020 12:33 AM

ADVERTISEMENT

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகள் வரை உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 3-ஆம் பருவத்துக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகளை பள்ளி வாரியாகப் பிரித்து அனுப்பும் இறுதி கட்டப் பணிகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் 83 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 4, 800 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். 2-ஆம் பருவம் முடிவுற்று 3-ஆம் பருவம் தொடங்கியதையொட்டி, அரசு வழங்கியுள்ள விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்க சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன் வந்தடைந்தன.

அவைகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் எம். நெடுமாறன், கே. செந்தில்குமாா் ஆகியோா் அந்தந்த பள்ளிக்கு பிரித்து அனுப்புவதற்கான இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்தனா்.

ஊரக மற்றும் உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் எண்ணப்படுவதை அடுத்து பள்ளிக்கல்வித் துறை ஜனவரி 3-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

ADVERTISEMENT

2-ஆம் பருவத் தோ்வுக்கான விடுமுறையை அடுத்து ஜனவரி 4-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்படுவதையொட்டி பள்ளித் தொடங்கிய முதல் நாளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் கிடைப்பதற்கான பணிகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT