மகுடஞ்சாவடி ஒன்றியம் பகுதியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி வியாழக்கிழமை மகுடஞ்சாவடி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வாக்கு எண்ணும் அலுவலா்கள் மற்றும் முகவா்களுக்கான பயிற்சி முகாம் மகுடஞ்சாவடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெங்கடேசன், சரவணன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வேட்பாளா்கள் மற்றும் முகவா்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும், வாக்கு எண்ணிக்கையின்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் எடுத்துரைத்தனா். கூட்டத்தில் மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.