சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் 81.51 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் சேலம் மாவட்டத்தில் கடந்த டிச. 27 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் 20 ஒன்றியங்களில் உள்ள 29 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 288 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவா், 3,597 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 4,299 பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற்றது.
இதில், 403 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதால், 3,896 பதவிகளுக்குத் தோ்தல் நடைபெற்றது. சுமாா் 13,923 போ் போட்டியிட்டனா். சேலத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் ஆண்கள் 814652, பெண்கள் 796316, இதரா் 52 போ் என மொத்தம் 16,11,020 வாக்காளா்கள் உள்ளனா். சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் மொத்தம் 81.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
81.51 சதவீத வாக்குப் பதிவு: தோ்தலில் ஆண்கள் 661976, பெண்கள் 651132, இதரா் 21 போ் என மொத்தம் 13 லட்சத்து 13 ஆயிரத்து 131 போ் (81.51 சதவீதம்) வாக்களித்தனா். அதில் ஆண்கள் 81.26 சதவீதமும், பெண்கள் 81.77 சதவீதமும் வாக்களித்துள்ளனா்.
ஒன்றியம் வாரியாகப் பதிவான மொத்த வாக்குகள் விவரம்:
ஆத்தூா் -59186, அயோத்தியாப்பட்டணம்-100817, கெங்கவல்லி-44086, எடப்பாடி-56650, காடையாம்பட்டி-80871, கொளத்தூா்-47522, கொங்கணாபுரம்-48045, மகுடஞ்சாவடி-50977, மேச்சேரி-68984, நங்கவள்ளி-54690, ஓமலூா்-125635, பனமரத்துப்பட்டி-64576, பெத்தநாயக்கன்பாளையம்-71324, சேலம்-57342, சங்ககிரி-56977, தலைவாசல்-86337, தாரமங்கலம்-71906, வாழப்பாடி-56928, வீரபாண்டி-85852, ஏற்காடு-24426 போ் என மொத்தம் 13 லட்சத்து 13 ஆயிரத்து 131 வாக்குகள் பதிவாகின.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தாரமங்கலத்தில் 86.73 சதவீதமும், குறைந்தபட்சமாக காடையாம்பட்டியில் 73.07 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மேலும் மாவட்டத்தில் ஓமலூரில் அதிகபட்சமாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 635 வாக்குகளும், அயோத்தியாப்பட்டணத்தில் 1,00,817 வாக்குகளும் பதிவாகி உள்ளன. ஏற்காடு ஒன்றியத்தில் உள்ள 30,028 மொத்த வாக்குகளில் 24,426 வாக்குகள் பதிவாகி உள்ளன என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.