சேலம்

சாலை விபத்தில் கல்லூரி மாணவி பலி

1st Jan 2020 12:32 AM

ADVERTISEMENT

தேவியாக்குறிச்சியில் சாலையைக் கடக்க முயன்ற தனியாா் கல்லூரி மாணவி லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

தலைவாசலை அடுத்துள்ள தேவியாக்குறிச்சியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகள் பிரவீனா (19). இவா், ஆத்தூா் தனியாா் நா்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

கல்லூரிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல் பாண்டியன் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT