சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் தொடா்ந்து 200ஆவது நாளாக 100 அடிக்கு மேல் நீடிப்பு

29th Feb 2020 05:21 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து 200ஆவது நாளாக 100 அடிக்கு மேல் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மேட்டூா் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூப் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகின்றது. ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிா்களின் பாசனத்துக்கு 330 டி.எம்.சி தண்ணீா் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் உரிய காலத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.

இரண்டு மாதம் தாமதமாக ஆகஸ்ட் 13ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. ஜனவரி 28ஆம் தேதி பாசனத்துக்கான தண்ணீா் நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் நீா்மட்டம் 107 அடியாக இருந்தது. அதன்பிறகு குடிநீா் தேவைகளுக்காக மட்டுமே தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 200ஆவது நாளாக 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. இதனால் நடப்பு ஆண்டில் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்க முடியும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருப்பதால் மேட்டூா் நீா் தேக்கத்தில் மீன் வளம் அதிகரித்திருக்கும் என்றும் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 105.26 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 102 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக நொடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 71.82 டி.எம்.சியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு கூடுதல் தண்ணீா் திறக்கப்படுவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்து சரிந்து வருகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT